சென்னையில் ஒரு கார்காலம்
சென்னையில் வரலாறு காணாத மழை, வெள்ளம். மீண்டும் மீண்டும் புயல். சாக்கடையாக இருந்த கூவத்தில் வெள்ளப் பெருக்கு. நடந்து கூட செல்லமுடியாத தெருக்களில் மக்கள் படகு சவாரி செய்கிறார்கள். இப்படி சென்னையில் ஒரு கார்காலம் நல்ல கார்- காலமாகவும் ஆகிவிட்டது. வந்தாச்சு வந்தாச்சு B.M.W வந்தாச்சு.
180 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் வருகிறது. 6 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும் என ஒப்பந்தம் இருந்தாலும் 2 ஆண்டுகளிலேயெ தொடங்க உள்ளதாம். ஓரளவேனும் வேலைவாய்ப்பு பெருகும். தமிழகத்தில் முதலீடு அதிகரிக்க இது நல்ல சமிக்ஞை.
அடுத்து VW (VolksWagen) சென்னைக்கு வந்துட்டா Daimler Chrysler (Mercedes) மட்டும் தான் பாககி ஜெர்மனியில்.
2 Comments:
Daimler Chrysler (Mercedes) புனேயில் ஏற்கெனவே வந்தாச்சு.
Really ;-) Thanks for the info.
Post a Comment
<< Home