.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, September 23, 2004

ஜக்குபாய் - வெறும் சக்கை - 1

சமீபத்தில் "அழகிய தீயே" என்று ஒரு அருமையான திரைப்படம் பார்த்தேன். ஒரு காட்சியில் "தமிழ்நாட்டில் மட்டும் தான் ஜெராக்ஸ் காப்பிக்கு கூட கை தட்டுவானுங்க" என்று ஒரு வசனம். எவ்வளவு நிதர்சனமான உண்மை. இங்கு தான் ஒரு நடிகன் என்ன செய்தாலும் அதற்கு அர்த்தம் கற்பிப்பதெற்கென்றே ரசிகர்கள் பட்டாளம் ஒன்று காத்திருக்கின்றது. ஊடகவியலார்களும், இவர்களுக்கெல்லாம் நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் எனக்காட்ட மிகவும் மெனக்கெடுகிறார்கள்.

"பாபா" படம் திரைக்கு வந்தபோது அது மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எல்லா பத்திரிக்கைகளும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தன. படப்பிடிப்பு ஆரம்பித்த தினத்திலிருந்தே ரஜினி எங்கு செல்கிறார், என்ன செய்கிறார், எந்த நிறத்தில் ஆடை அணிகிறார் என்றெல்லாம் நேரடி வர்ணனை செய்த பத்திரிக்கைகள் பல உண்டு. ஆனந்த விகடன், குமுதம் போன்ற முன்னணி இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கேட்டால் இது வியாபார சூத்திரம் என்பார்கள். ரஜினியோ ஒரு படி மேலே சென்று, இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் நான் நடிப்பதையே நிறுத்திக்கொள்வேன் (அவருக்கே படம் ஓடாது என தெரிந்துவிட்டது போல) என ரசிகர்களை சூடேற்றிப்பார்த்தார். நடந்ததா? படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டது. இத்தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறினார்கள். சில சுளுவான் குஞ்சுகளோ, ரஜினி வேண்டுமென்றே தான் இப்படிச் செய்தார் என்று சப்பைகட்டு கட்டினார்கள்.

என்னப்பா இது! ஜக்குபாய் என்று தலைப்பை வைத்துவிட்டு, அதைப்பற்றி ஒன்றுமே சொல்லலையேன்னு நினைக்காதீங்க. இன்னும் ஓரிரு நாளில் அதைப்பற்றி எழுதுகிறேன்.

2 Comments:

At 7:44 am, Blogger Raja said...

ரஜினி படத்தால் தயாரிப்பாளகள் மட்டும் அல்ல பத்திரிக்கைகளும் சம்பாதிக்கின்றனர் என்ற தகவலை வஞ்ச புகழ்ச்சி அணியில் அழகாக சொல்லியதற்கு நன்றி. ஜக்குபாய் பட்ம் எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பே சக்கை என எழுதியது மூலம் ரஜினி விமர்சிப்பதற்காக மட்டுமே தாங்கள் எழுதியது தெரிகிறது.

மில்லினியம் ஜோக் ஒன்று சொல்லி இருந்தீர்கள். ரஜினி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடைசி படம் என்று சொன்னார் என்று.
அவர் படையப்ப்பா வெற்றிக்கு பிறகே படத்தில் நடிக்க விருப்பமில்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இன்னும் படம் நடித்து கொண்டிருக்கிறார்.

பாபா படம் 100 நாட்கள் ஒடிய படம், பனம் திருப்பி கொடுத்த பிறகும் அதிக விலைக்கு விற்ற படம். பாபா ரஜினி படத்தை ஒப்பிடும்போது மட்டுமே சுமார். மற்ற படத்துடன் ஒப்பிடும்போது வர்த்தக ரீதியிலும் மாபெரும் வெற்றி படமே.

அமெரிக்காவில் பாபா பட்த்தில் வந்த வருமானத்தில் தான் திருநெல்வேலி துப்புறவு தொலிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுத்துள்ளது ஒரு செவை அமைப்பு.

 
At 11:06 pm, Blogger Vincent Paul said...

O ! Rajani Padathtil Ivvalavu vishayamirukka?
Kirukkan Vishayamaana Aaluthan!
kirukkan ithapp padichchu parunga. www.poiyummeiyum.blogspot.com

 

Post a Comment

<< Home