.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Sunday, September 04, 2005

நாட்டு நடப்பு

தமிழக பொறியியற் கல்லுாரி மாணவர்களுக்கு உடை மற்றும் பிற நடத்தை விடயங்களில் சில கோட்பாடுகளை அண்ணா பல்கலைகழகம் வரையறுத்துள்ளது. அதில் முக்கியமானவை இங்கே.

1) கல்லுாரி வளாகத்திலோ, வகுப்பறையிலோ கைத்தொலைபேசிகளை உபயோகிக்க கூடாது.

2) நாகரிகமான (?) உடை அணிந்து வரவேண்டும்.
* ஆண்கள் ஜுன்ஸ், டி சர்ட் அணிய கூடாது.
* பெண்கள் கையில்லாத சட்டை, குட்டை பாவாடை அணிய கூடாது.


3) கல்லுாரியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் சினிமா பாடலோ, சினிமா பாடலுக்கு நடனமோ அல்லது சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ இருக்ககூடாது.

முதல் பாயிண்ட் சில மாற்றங்களோடு ஏற்ககூடியதாக இருக்கிறது. பி.பி.சி. தமிழோசையில் பல்கலை முதல்வர் விசுவநாதன் பேசியபோது சில வாதங்களை வைத்தார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சில மாணவர்கள் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இல்லையென்றால்
கைத்தொலைபேசியில் கேம்ஸ் விளையாடுகிறார்கள் என்றார். கவனிக்கப்பட வேண்டிய வாதம். ஆனால் வகுப்பிற்கு வெளியிலும், பல்கலை வளாகத்திலும் அனுமதிக்கலாம். அதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

உடை விடயம் பத்தாம் பசலித்தனமானது. நாகரிகமான உடை என்று பொத்தாம் பொதுவாக கூறுவது குழப்பத்தை விளைவிக்க கூடியது. எது நாகரிகம்? என்பதற்கு அளவுகோல் கிடையாது. நாகரிகம் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் விடயம். எனக்கு நாகரிகமாக தெரிவது மற்றொருவருக்கு அநாகரிகமாக தெரிய வாய்ப்புண்டு. ஜுன்ஸ், டி சர்ட் எல்லாம் நாகரிகமில்லையா? பெண்களின் உடை கட்டுப்பாடு பற்றி விசுவநாதன் கூறியது சரியான
சப்பைக்கட்டு. பெண்கள் குட்டை பாவாடை அணிவதால் தான் ஈவ் டீசிங் அதிகரித்துவிட்டதாக கூறுகிறார். இது முட்டாள்தனமான வாதம். உடை கட்டுப்பாடுகள் எந்தவிதத்திலும் ஈவ் டீசிங்கிற்கு தீர்வாகாது. இன்னும் சொல்லப்போனால் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.

சினிமா இன்று தமிழரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. கல்லுாரி கலை நிகழ்ச்சிகளில் சினிமாவை நீக்கினால் மாணவர்கள் பிற கலைகளில் தங்கள் திறனை வளர்க்கக் கூடும். ஆனால் சினிமாவும் ஒரு கலை தான் . அதையும் மறந்துவிட கூடாது. இது கிரிக்கெட்டைப் போலவே.
கிரிக்கெட்டை ஒழித்தால் தான பிற விளையாட்டுகள் இந்தியாவில் வளரும் என்று பலர் நினைக்கிறார்கள். அதைப்போல இதுவும் தீவிர விவாதத்திறகுட்படுத்தப்படவேண்டிய கருத்தே.

இதுவரை இதைப்பற்றிய சுற்றறிக்கை கல்லுாரிகளை வந்து சேரவில்லையாம். செயல்படுத்தும் முன்னால் கொஞ்சம் யோசித்தால் நல்லது.

*********************************************************************************************

சிலர் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கும்போது, எவராவது எழுப்பினால் படபடப்புடன் காணப்படுவர். நாம் ஏதாவது சொன்னோமென்றால் பதட்டத்தில் கண்டதையும் பேசுவார்கள்; செய்வார்கள். நம் முதல்வர் இந்த ஒரு நிலையில் தான் இருக்கிறார் என நினைக்கிறேன். நன்றாக துாங்கிக்
கொண்டிருந்தவரை எழுப்பி, பிரதமர் சென்னை வருகிறார் என்று சொல்ல பிரதமர் வர்றாரா.. நானும் வர்றேன்.. சீ..சீ போறென்.. போகலை என்று பிதற்றுகிறார். திடீரென்று சேதுவை தோண்டாதே.. கால்வாயை மூடு என்று கரணமடிக்கிறார். நானும், எம்.ஜி.ஆரும் தான் இந்த திட்டத்துக்கு குரல் கொடுத்தோம். இதை எப்பாடுபட்டாவது செயல்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை கம்யுனிஸட் தலைவர் தா.பாண்டியன் குறிப்பிட்டு இப்படியெல்லாம் பேசிபுட்டு இப்படி செய்யலாமா என்று அங்கலாய்க்கிறார். செவிடன் காதில சங்கை ஊதலாமோ? T.R.பாலு தோண்டுறதெல்லாம் நிறுத்தமுடியாது. உன்னால முடிஞ்சத பாத்துக்கோமான்னு சவால் விடுறார். துாத்துக்குடி மாவட்ட மீனவர் சங்க தலைவர் கூட எங்க சந்தேகங்கதை தீர்த்துட்டு தோண்டுங்கன்னு தான் சொல்றார். அவர் என்ன செய்ய முடியும். அவுக பொழப்பு தான் இங்க அல்லாடுது.

7 Comments:

At 8:00 pm, Anonymous Anonymous said...

அடுத்த சானியா பதிவு ரெடியா ?
:-)

 
At 8:34 pm, Blogger kirukan said...

நக்கலா? ;-)

இப்போ போட்டிக்கு நெய்வேலி விச்சு வேற இருக்காரு..

 
At 8:51 pm, Anonymous Anonymous said...

நக்கல் எல்லாம் இல்லை கிறுக்கரே...
இன்னிக்கும் ஜெயிப்பாருன்னு ஒரு நம்பிக்கைதான்.
சரபோவாவும் யூஎஸ் ஓபனில் மூன்றாவது சுற்று தாண்டியது இல்லை என நினைக்கிறேன்.

இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் ஆட்டம் துவங்கி விடும்னு நினைக்கிறேன், நம்பிக்கையோடு பார்ப்போம்.
நிச்சயம் ஜெயிப்பார்.

ஜெர்மன்லே எந்த சேனல்லே வருது ? ஏதாவது FTA சேனல்லே வருதா?

 
At 9:03 pm, Anonymous Anonymous said...

anna univ. kattupadugal maha abatham.nalla hitler vc vaithirukirar.

indha vayadhil jeans aniyamal eppozudhu anivadhu?
vagupil cellphone illai endral vilayadamudiyadha?
vaguppu avvalavu interesting aaga iruku endru therigiradhu.

 
At 9:15 pm, Blogger kirukan said...

பரணீ நான் இணைய வர்ணணை தான் கேட்கிறேன். Euro Sports ல எல்லா ஆட்டங்களும் வருது. சானியா ஜெயிப்பாருன்னு நானும் நம்புறேன்.

அனானி.. நமக்கு புரிகிறது. vc க்கு புரியணுமே.

பத்ரி இதைப்பத்தி விரிவா எழுதுவாருன்னு காத்துகிட்டே இருந்தேன். ரொம்ப பிசியா இருக்காருன்னு நினைக்குறேன்.

 
At 11:44 pm, Blogger முகமூடி said...

// ரொம்ப பிசியா இருக்காருன்னு நினைக்குறேன் //

or may be because this has been discussed already by many longggg back...

http://mugamoodi.blogspot.com/2005/07/blog-post_29.html

 
At 4:34 pm, Blogger kirukan said...

Mugamoodi... I just saw your post.. A lot has been discussed..

But I happend to hear the interview of VC in BBC TamilOOsai just 2 days back.

 

Post a Comment

<< Home