.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Saturday, December 10, 2005

என் கதை முடியும் நேரமிது

ரஜினி பேன் (விசிறிங்க, தலையில உள்ள பேன் இல்ல), கமல் பேனெல்லாம் என் கம்ப்யுட்டர் கிட்ட தோத்துடுவாங்க. ஆன் பண்ணினா 2 நிமிஷம் ஒரே விசில் சத்தம் தான். ஒரு வாரமா இப்படித்தான் இருக்குது. எனக்கென்னமோ அந்த சத்தம் சங்கொலி மாதிரியே இருந்தது. என் கதை முடியும் நேரமிது ன்னு கணி பாடுது. கூகிள் ஆண்டவனை நாடி வரம் வேண்டினேன். இது ஒண்ணும் புதுசு இல்லை நைனா. வயசாயிடுச்சு உன் பேனுக்கு (Processor fan). அவ்ளோதான் னு சொல்லுது. பேனை துடைச்சு பாரு. இல்லாங்காட்டி கடாசிட்டு புதுசு வாங்கிடுங்கறார்.

0 Comments:

Post a Comment

<< Home