ஜெயலட்சுமி-யக்கோவ்
இன்று யாருடைய நிழற்படம் (அட ஃபோட்டோங்க) பத்திரிக்கைகளில் அதிகமாக வருகிறது என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தோமானால் அது நிச்சயம் ஜெயலச்சுமியாகத் தான் இருக்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் அவர் பலரையும் (காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள்) தன் வழக்கில் சம்பந்தப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இத்தோடு நிறுத்துகிறாரா? இல்லை. எல்லா பத்திரிக்கைகளுக்கும் பல கோணங்களில், பல்வேறு ஆடைகளில் ஒரு மாடல் போல போஸ் கொடுக்கிறார். குற்றாலம், ஊட்டி என்று தான் டூர் அடித்த போட்டாக்களை எல்லாம் தருகிறார். இப்போது வீடியோ ஆதாரமெல்லாம் தன்னிடம் இருப்பதாக இன்னொரு குண்டை போடுகிறார். இந்த மாதிரி பரபரப்பான வழக்குகளினால் யாருக்கு லாபம் என்று பார்த்தால் நிச்சயமாக பத்திரிக்கைகளுக்குத் தான். இத்தனை நாள் (பல வருடங்களாக) ஜெயலட்சுமி காவல்துறை அதிகாரிகளோடு சேர்ந்து செய்த அடாவடிகளையும், கூத்துக்களையும் வெளிக்கொண்டு வராத பத்திரிக்கைகள், இன்று "ஜெயலட்சுமியுடன் ஒரு நாள்" என்று முகப்புக் கட்டுரையே எழுதுகின்றன. "ஜெயலட்சுமி சீரழிந்தாரா? இல்லை சீரழித்தாரா?" என்று பட்டிமன்றம் நடத்துகின்றன. ஜெயலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக்க ஒரு படை கிளம்பியிருக்கிறது. விரைவில் "ஜெயலட்சுமி ஒரு சகாப்தம்" என்று ஒரு நுரல் கூட வரலாம். யார் கண்டது. இன்னும் இது எத்தனை நாளைக்கு? இன்னொரு முறுக்கு பார்ட்டியோ, கஞ்சா செடியோ வரும் வரைக்குத்தான். இதுதான் இன்றைய தமிழ் மக்களின் நிலை.
1 Comments:
ஜயலஷ்மியின் வாழ்க்கை நிச்சயமாகப் படமாக வராது. ஏனெனில் அதில் ஆபாசம் இருக்கக் கூடாதென்று நிபந்தனை விதித்துள்ளார் அவர்!
ராகவன்
Post a Comment
<< Home