பிறந்தநாள் வாழ்த்து
டிசம்பர் 11. அவசரப்படாதீங்க. பிறந்தநாள் வாழ்த்து பாரதியாருக்கில்லை. பாரதியார் பிறந்தநாள் ஞாபகம் வர்றதே எங்க அண்ணன் பிறந்தநாள் ஞாபகம் வரும் போது தான். அவருக்கும் அன்னைக்குத்தான் பிறந்தநாள். Happy Birthday Anna. Same to you Bharathi. Incidentally, எங்க அண்ணன் பொண்ணு பேரும் பாரதி தான். பாரதி தான் தமிழில் எனக்கும் பிடித்த புலவன். பாடப்புத்தகதில உள்ள பாரதியின் கவிதைகள், சினிமா பாடல்களாக மாறிய சில பாடல்கள் மூலமாக மட்டுமே பாரதியை அறிவேன். கோவில்பட்டியில் படிக்கிறபோது ஒவ்வொரு வாரமும் எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீட்டை கடந்துதான் செல்வேன். ஏனோ ஒரு முறை கூட உள்ளே சென்று பார்க்கவேண்டும் என்று தோணவில்லை. கண்டிப்பா அடுத்த தடவை பார்க்கணும்.
2 Comments:
http://theyn.blogspot.com/2006/01/blog-post_18.html
செஸ் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த நாள் - 11 டிசம்பர் 1969
:-)
Post a Comment
<< Home