ஒரு பேனாவை எடுங்கள்.
"எப்படி எழுதுவது?" என்று கேட்டால் "கையால தான்" என்று கடிப்பார்கள் சிலர். எப்போதோ, எங்கேயோ படித்த விடயம் ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. "எழுத்தாளனாவது எப்படி?" என்று ஒருத்தர் பலநூறு பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் வெளியிட்டார். வாங்கியவர்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. முதல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்.
"ஒரு பேனாவை எடுங்கள். பின்வரும் பக்கங்களில் உங்களுக்கு தோணுவதை எல்லாம் எழுதுங்கள்".
அந்தப் பக்கத்தை தவிர மற்றவையனைத்தும் வெள்ளைத்தாள்களே. இதிலிருந்து என்ன தெரிகிறது? என்று நான் ஒன்றும் புதிர் போடப் போவதில்லை. புரிந்தவர்களுக்கு புரியும். எனக்கு புரிஞ்சுடுச்சுப்பா.
0 Comments:
Post a Comment
<< Home