.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Wednesday, February 23, 2005

புஷ் - ஐரோப்பிய பயணம்


ஐரோப்பா பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் புஷ், நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களோடு விவாதத்தில் கலந்து கொண்டார்.

புஷ் வருகையின் குறிக்கோள்கள்.

1)நேடோ அமைப்பின் எதிர்காலம் பற்றி விவாதிப்பது. புஷ் வருவதற்கு முன்னால் நேடோ அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்று ஜெர்மன் சான்சலர் ஸ்க்ராய்டர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

2)மத்திய கிழக்கு அமைதி/அமெரிக்க நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டுவது.

3)ஈரான், வடகொரியா அணுஆயத பிரச்சனை பற்றி பேசுவது. பொருளாதார சலுகைகளுக்கு மாற்றாக அணுஆயுத திட்டத்தை கைவிடுமாறு பிரான்சும், ஜெர்மனியும் ஈரானுடன் பேரம் தொடங்கியுள்ளனர்.

4)சிரியாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை பற்றியும் விவாதிக்கிறார்.

5)இவையெல்லாவெற்றிற்கும் மேலாக, ஈராக் போருக்கு பின்னால் பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஏற்பட்ட சுணக்கத்தை சரிப்படுத்துவது.

இன்று ஜெர்மனிக்கு சில மணி நேரங்கள் வருகை தருகிறார். புஷ் சின் இந்த வருகைக்கு பலமான எதிர்ப்பு இருப்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home