.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Saturday, December 11, 2004

உலகின் புதிய 7 அதிசயங்களும், அதன் நம்பகத்தன்மையும்

உலக அதிசயங்கள் யாவை? இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதிலை கொடுப்பார்கள். முதன்முதலில் உலகின் 7 அதிசயங்களைத் தொகுத்தவர்கள் பழங்கால கிரேக்கர்களே. அதுவும் அவர்கள் மத்தியதரைக்கடல் (Mediterrenian world -சரிதானா?) பகுதியை மட்டுமே கணக்கில் கொண்டார்கள். அவர்கள் கூறிய அதிசயங்களின் பட்டியல் இங்கே. அதன்பிறகு ஒவ்வொருவரும் பட்டியலிலிருந்து சிலவற்றை நீக்கியும், சேர்த்துக்கொண்டும் புதிய அதிசயங்களை அறிவித்தார்கள்.

ஐ.நா. வின் UNESCO அமைப்பு, உலகின் பாரம்பரியமிக்க இடங்களையும், கட்டிடங்களையும் அறிவிக்கிறது. அந்தப் பட்டியல் இங்கே. இது இன்னும் பல சேவைகளையும் செய்து வருகிறது. ஆனால் உலக அதிசயங்களாக இது எதையும் அறிவிக்கவில்லை.

தற்போது இணைய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்க new 7 wonders என்ற நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. இது இந்தியாவில் இருந்து தாஜ்மகாலையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் பரிந்துரை செய்துள்ளது. இதனால் இவை இரண்டும் தான் இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க அதிசயங்கள் என எண்ண வேண்டாம். இந்தப் பட்டியலில் நீங்கள் விரும்பும் அதிசயத்தை சேர்ப்பது மிக எளிது. குறைந்தது ஏழு பேர் ஒரு இடத்தை பரிந்துரை செய்தாலே போதுமானது என்று அவர்களே தங்களுடைய வலையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான வாக்கெடுப்பினால் உலகின் புதிய 7 அதிசயங்களை இனம் காண முடியுமா? என்பது சந்தேகத்திற்குறியவையே. தமிழ் மக்கள் அனைவரும் கண்டிப்பாக மீனாட்சியம்மன் கோயிலிற்குத்தான் வாக்களித்திருப்பார்கள், மற்ற அதிசயங்களின் பாரம்பரியங்களை உணராமலே. இதைப்போன்றது தான் ஒவ்வொரு நாட்டவரின் கதியும். நடுநிலையாக வாக்களிப்பவர்கள் மிகச்சிலரே.

இந்த வாக்கெடு்ப்பின் மூலம் அறிய முடிவது ஒன்றே. யார் தன் இன, மொழி மற்றும் பிற மீது அதிக பற்றுள்ளவர்கள்? இதை இன்று தமிழர்கள் மத்தியில் கண்கூடாக பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வாக்குகேட்டு பத்திரிக்கைகளும், குறுஞ்செய்திகளும், இ-குழு மடல்களும் உலாவுகின்றன.

இதே போன்ற நிலைதான் சென்ற ஆண்டு, BBC உலகின் சிறந்த பத்து பாடல்களை வரிசைப்படுத்த ஒரு இணைய வாக்கெடுப்பு நடத்தியது. இளையராஜாவின் "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்கு வாக்களிக்க சொல்லி எனக்கு ஒரு மடல் வந்தது. அதன் சாராம்சம் இது தான். வங்காளிகளும், மற்ற இந்தியர்களும் வந்தேமாதரம் பாடலுக்கு வாக்களித்துக் கொண்டு இருக்கிறார்கள், எனவே ராக்கம்மாவுக்கு வாக்களிக்கச்சொல்கிறது கடிதம். இதைப்பார்த்த
பாகிஸ்தானியர்கள் "தில் தில் பாகிஸ்தான்" பாடலுக்கு வாக்கு சேர்க்க, ஈழத்தமிழர்கள் தங்களுடைய ஈழப்பாடலுக்கு வாக்கு சேர்க்க என பெரிய தேர்தலே நடந்தேறியது. அப்போட்டி முடிவுகள் இங்கே. பத்தில் ஆறு பாடல்கள் இந்திய துணைக்கண்டத்திலிருந்து தான்.

சரி. new 7 wonders என்ன தான் செய்ய நினைக்கிறது. இந்த வாக்கெடுப்பு மட்டுமல்லாது அவர்கள் பல வழியில் பணம் சேர்க்கிறார்கள். சேர்த்த பணத்தை வைத்து ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளினால் அழிக்கப்பட்ட பாமியான் புத்த சிலைகளை புணரமைக்க திட்டமாம். இவையெல்லாம் உண்மைதானா? இந்த சுட்டியை பார்ககும்போது ஏதோ உண்மை இருப்பது போலத்தான் தோன்றுகிறது.

இவையெல்லாம் நடக்கிறதா என்று பார்க்க ஜனவரி1, 2006 வரை காத்திருக்கவேண்டும். அன்று தான் தேர்தல் முடிவு.


2 Comments:

At 2:18 pm, Blogger ராஜா said...

கிறுக்கன்: (என்னங்க இப்படி ஒரு பெயர்?) நல்ல ஆராய்ந்து எழுதிருக்கீங்க. செய்தியின் உண்மை நிலையை ஊர்ஜிதம் செய்துகொள்ளாமல் மக்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வருகிறார்கள். இதற்கு தமிழக ஊடகங்கள் அளித்து வரும் கண்மூடித்தனமான ஆதரவு ஏன் என்பதுதான் எனக்கு விளங்காததாக இருக்கிறது. பத்திரிகை என்றால் விசாரித்து எழுத வேண்டாமா? நேற்று சன் டி.வில் காட்டினார்கள் பெரிய கியூவில் நின்று மக்கள் ஆர்வமாக ஓட்டு போட்டுக் கொண்டிருந்தனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்கள் பங்களிப்பை தருவதாக பெருமைப்பட்டு கொண்டனர். பாவமா இருந்தது.

இதை விடுங்கள். தாஜ்மஹாலை மீண்டும் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன வந்தது? ஏற்கெனவே அது உலக அதிசயங்களில் ஒன்றாகத்தானே இருக்கிறது.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே :(

 
At 7:22 am, Blogger தகடூர் கோபி(Gopi) said...

சரியாகச் சொன்னீர்கள்!!. ஓட்டு போடும் மக்களின் முட்டாள்தனத்தை நக்கலாக சாடியுள்ளார் பினாத்தல்கள் சுரேஷ்

சுட்டி: http://penathal.blogspot.com/2004/12/blog-post_21.html

 

Post a Comment

<< Home