சங்கராச்சாரியாருக்கு சில கேள்விகள்
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டாலும் செய்யப்பட்டார், ஏதோ உலக இந்துக்களுக்கெல்லாம் அவமானம் உண்டானது போல செய்திவரத் தொடங்கிவிட்டது. இதையெல்லாம் செய்பவர்கள் யாரென்று தமிழர்கள் நன்கறிவர். காலங்காலமாக அதிகாரவர்கத்தினருக்கு அடிவருடியவர்கள். கடவுளை தங்களுடைய தனிச்சொத்தாக்கியவர்கள். பூசைக்கென்று புதுமொழி கண்டவர்கள். சாதி செய்து சாதித்தவர்கள். தீண்டாமையை தோற்றுவித்தவர்கள். வேதம் இயற்றி வேற்றுமை உண்டாக்கியவர்கள். சொன்னால் சொல்லிமாளாது.
இவ்வளவு பாரம்பரியமிக்க ஒரு சாதித்(த) தலைவரை கைது செய்தவுடன், குய்யோ முய்யோ என்று கதறுகிறார்கள். பாமர மக்களின் மெளன மொழிக்கு, வேறு அர்த்தம் காண்பிக்க முயல்கிறார்கள்.
இங்கே என் மனதில் உள்ள கேள்விகளை வைக்கிறேன்.
1) தலித்களுடன் தீண்டாமை பாராட்டாது பழகுகிறார் என்று சொல்லும் நண்பர்களே, "வர்ணாசிரமத்தை நான் ஏற்கவில்லை" என்று செயேந்திரர் அறிவிப்பாரா?
2) காஞ்சி மடத்தின் முக்கிய பொறுப்பில் பிராமணரல்லாத யாரையாவது நியமிப்பாரா?
3) எம்மொழியில் பூசை செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று அறிவிக்கத் தயாரா?
இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் என் மனதில் உள்ளது. ஒவ்வொன்றாய் வரும்.
3 Comments:
appadi podu...
Ithu ithu kelvi raasaa...
kalakkumaa nee....
நல்ல பதிவு. நல்ல கேள்விகள். ஆமாம் பாரம்பரியமிக்க, புகழ் மிக்க மடம் அப்படீன்னு போறவன் வர்றவன் எல்லாம் எழுதுறமாதிரி காட்டுறாங்களே. பாரம்பர்யத்தால் மக்களுக்கு விளைந்த நன்மை என்ன? அந்தப்புகழ் என்ன? பெண்களுக்கும், தலித்துகளுக்கும் இன்றுவரை எதிரான நிலைப்பாடுள்ள மடத்தின் பாரம்பர்யத்தில் பெருமை கொள்ள சாதரணனுக்கு என்ன இருக்கிறது?
தொடர்ந்து எழுதுங்கள்!
நன்றி
திரு.சங்கமித்திரன் அவர்கட்கு,
ஐயா நீங்கள் முதல் பாராவில் சொல்லியுள்ள கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
//என்னவோ பார்ப்பனர் மட்டுமே சாதி பார்ப்பது போலவும் பிற உயர்சாதி இந்துக்கள் தலித் மக்களை கட்டியணைத்து உறவு பாராட்டுவது போலவும் இருக்கிறது உங்கள் கூற்று. இது நியாயமா?//
அப்படியானால் நீங்களும் பார்ப்பனர்களின் தீண்டாமையை ஆமோதிக்கிறீர்கள். நீங்களும் அவா தானா?
சிந்தித்துப் பேசச் சொல்கிறீர்கள். எங்களுக்கு சிந்திக்கும் உரிமை கிடைத்ததனால் வந்த கேள்விகள் தான் இவை.
யாரய்யா மூடப் பழக்கவழக்கங்களை ஆதரிப்பது?. பாமர மக்களை அதில் மூழ்கவிட்டு ஆதாயம் தேட நினைப்பவர்களே. இந்துக்களின் தலைவராக தன்னைத்தானே மகுடம் ஏற்றியவர்கள் இதைப்பற்றி வாய் திறந்ததுண்டா?
நீங்கள் கடைசி வரியில் கூறியது அபத்தம். ஏதோ நீங்கள் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு எல்லாம் அறிந்தவர் போலவும், இங்குள்ளவர்களை யாதும் அறியாதவர் போல சொல்வது உமது அறியாமையையும், சாதிப் பற்று கொண்டு, சிந்திக்க திராணியற்று, கண்மூடித்தனமாக உளறுவதைப் போல உள்ளது.
Post a Comment
<< Home