ஆத்திசூடி என்றால் என்ன?
TSCII இணைய குழுமத்தில் நண்பர் ஒருவர் ஆத்திசூடி என்ற வார்த்தைக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை கேடடிருக்கிறார். இருவேறான பதில்களை நான் படித்தேன்.
ஒருவர் ஆத்தி என்பது ஒரு மலர் என்றும், சூடி என்பது சூடுவது என்றும் கூறுகிறார். இதன்படி aathi adorned என்று கூறலாம் என்கிறார்.
இன்னொருவர் சூடி என்பது சுவடி என்பதன் மறுவலாகவும், ஆத்தி என்பது ஆதி என்பதன் மறுவலாகவும் இருக்கலாம் என்கிறார்.
இதன் உணமையான பொருள் அறிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
2 Comments:
'ஆத்தி சூடி இளம் பிறையணிந்து மோனத்திருக்கும் முழு வெண்மேனியான் ' என்று பாரதி சிவனைக் குறிப்பிடுகிறார். அதாவது ஆத்தி மாலை அனிந்து பிறைச் சந்திரனை அணிந்து மேனி முழுதும் சாம்பல் பூசி மோனத்தவத்தில் இருப்பவன்.
ஆத்தி மலர்களை நீங்கள் பார்த்ததில்லையா? வெண்ணிறமாக இருக்கும். அகத்திக் கீரை என்று சொல்வார்களே? அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த தழைகள் உள்ள மரத்தில் பூக்கும் பூக்கள்தான் ஆத்திப் பூ
மாலன்
Thanks Mr.Maalan. I will pass the message in TSCII group also..
Post a Comment
<< Home