ஹல்லே (சாலே) பயணம்
சில வேளைகளில் சில வேலைகளை செய்யாமலிருப்பது தான் நல்லது. நேற்றிரவு சரியாக 12.30 மணி. வலைப்பதிந்து விட்டு உறங்க நினைத்தேன். சரி. gmailஐ ஒருதடவை செக் பண்ணிடுவோம்னு நினைச்சா அங்கே சனியன் சம்மணமிட்டு உட்காந்துகிட்டு இருக்கு. அப்போது தான் நண்பர் ஒருவர் மடல் அனுப்பியிருந்தார். இந்த மடலை இன்றிரவே படித்துவிட்டால் உடனே பதில் எழுது. நாளை காலை 11 மணிக்கு தயாராய் இரு. ஹல்லே போவோம் என்று. சனியன்னு என் நண்பரைச் சொல்லலீங்க. என் விதியைச் சொன்னேன். அதிகாலை 9.30 ;-) மணிக்கெல்லாம் எழுந்து சூரிய நமஸ்காரம் பண்ணுவோம்னு நினைச்சா சூரியனைக் காணவில்லை. யாராவது பார்த்தா அவனை இந்த பக்கம் வரச் சொல்லுங்க. இன்றைக்கு முழுவதுமே இங்கே லீவு போட்டுட்டார். சரியா 11.15 க்கு கிளம்பி மதியம் 1 மணிக்கெல்லாம் போய்ச் சேந்தாச்சு. நண்பரின் கஸ்டமர் ஒருவரை சந்திக்க சென்றோம். இன்னைக்குன்னு சரியான குளிர். கஸ்டமரோ கட்டடம் கட்டும் பணியில் இருப்பவர். இழு இழுன்னு பேச்சை இழுத்துக்கிட்டே போனார். Sweat Shirt, Jacket போட்டிருந்தாலும் வேலைக்காகலை. குளிரிலேயே 4 மணி நேரம் நின்னேன். எனக்கு ஜெர்மன் மொழி மெதுவா பேசினாலே 50% தான் புரியும். ஆனா அவிங்க புல்லட் ரயில் வேகத்துல பேசுறாங்க. எனக்கு எல்லாம் புரியிறது மாதிரி தலையாட்டிகிட்டே நின்னேன். ஒரு வழியா 9 மணிக்கு வீட்டுக்கு வந்தாச்சு. மணி இப்போ இரவு 11. கணடிப்பா இன்னைக்கு ஒரு வேலை செய்யக்கூடாது. என்ன வேலைங்கறீங்களா?. முதல்ல இருந்து திருப்பி படிங்க.
1 Comments:
ur blog is
cooooooooooooooool!
coooooool
cool!
Post a Comment
<< Home