தேர்தல் முடிவுகள்
செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயணசுவாமி. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நண்பகல் முடிவடைந்தது. இத்தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தமிழக மக்கள் ஒரு அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
தேர்தல் முடிவுகள்.
தி.மு.க கூட்டணி 60
அ.தி.மு.க. கூட்டணி 50
தே.மு.தி.க. கூட்டணி 30
சுயேட்சைகள் 94
அனைத்து கூட்டணிகளும் தேர்தல் அறிக்கையில் சகலவிதமன இலவசங்களை அறிவித்திருந்தனர். மக்களை முட்டாள்களாக கருதிய இக்கட்சிகளுக்கு பாடம் புகட்டவே மக்கள் இவ்வாறான ஒரு முடிவை எடுத்து சுயேட்சைகளை அதிகளவில் வெற்றிபெற செய்துள்ளார்கள். வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர்களும் மக்களின் இந்த முடிவை ஆதரித்து, தாங்கள் எந்த ஒரு கூட்டணியையும் ஆதரிக்காமல் எதிர்க்கட்சியாக செயல்படபோவதாக அறிவித்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் தே.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. இக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அறிவித்துள்ள இலவசங்கள் எல்லாம் தங்களுக்கு கிடைக்குமா என்பதே தமிழக மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது!!!.
4 Comments:
அப்படியே நடந்தாலும் - நல்லதற்கில்லை - ஏனென்றால் சுயேட்சைகள் கடத்தல் - மிரட்டல் - என்ற ஆயிரம் நாடகங்கள் நடக்கும்...
Super_nga....:-))
appadi nadanthal vaiko 1000km nadappar
ஜீவா(Jeeva), நடராஜன், அனானி
நாம நினைச்சது நடக்காம போயிடுச்சே.
Post a Comment
<< Home