போலியும் அதன் பரிமாணங்களும்
போலி என்று சொன்னால் , இன்று தமிழ் வலைப்பதிவுலகமே நடுங்குகிறது. ஏன் என்று தான் புரியவில்லை. ஆனால் நான் என்றுமே போலியின் முதல் ரசிகனாக இருந்து வந்திருக்கிறேன். அதன் பல பரிமாணங்களையும் பார்த்து, ரசித்து, சுவைத்திருக்கிறேன். இங்கே உங்கள் மனம் குளிர போலியின் பல வகையான பரிமாணங்களையும் கொடுத்திருக்கிறேன்.
போலியிலே சிறந்த போலி ஸ்ரி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போலி தான்.
தேங்காய் போலி | இனிப்பு போலி |
மசாலா போலி |
பின்குறிப்பு: போளி உண்ட மயக்கத்தில் போளி போலி ஆகிவிட்டது.
13 Comments:
அடப்பாவிகளா...எரியுற போளியிலே நெய்யை ஊத்துறீங்களே?!
I second you. :-)
தமிழ்மணத்துல இன்னொரு கிறுக்கனும் இருக்காரோ? அவர் தமிழ் கிறுக்கன். நீங்கள் ஆங்கிலக் கிறுக்கன். பெயரை எந்த மொழியில் எழுதியிருக்கிறீர்கள் என்பதைச் சொல்கிறேன்.
:-))
போலிக்கு இல்லை போளிக்கு இன்னொரு பெயர் தெரியுமா? ஒப்புட்டு என்பதே அது.
Suggestion: Remove word verification.
சூப்பர் அண்ணாத்தே!
நன்றி குழந்தாய். இது போன்ற அரிய பல கருத்துக்களை எடுத்துக்கூறவே யாம் இப்பூவுலகில் அவதரித்தோம்.
அடப்பாவிகளா...என்ன நடக்குது இங்கே?
அப்போ அந்த போலி ரசிகர் மன்றம் எல்லாம் போளி ரசிகர் மன்றமா?
போளிகளுக்கும் போலிகள் இத்தனையா ? உங்கள் போளி ஆராய்ச்சி போலி அல்ல
என்னமோ ஏதோ என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தால், என்னங்க நீங்க, இப்படி போலி ரசிகராயிருக்கீங்க.
//மாயவரத்தான்......அடப்பாவிகளா...என்ன நடக்குது இங்கே?//
வாழ்க்கையே ஈசனின் திருவிளையாடலப்பா!!
//நாமக்கல் சிபி//
குழந்தைகள் முதல் பெரியவர் வரை போளிக்கு பெரிய இரசிகர் மன்றமே உள்ளது. சந்தேகம் வரின் அண்ணாநகர் ஸ்ரி கிருஷ்ணா ஸ்வீட்ஸ சென்று பார்க்கவும்
//GOVIKANNAN//
யாம் பாக்கியம் செய்தோம். வருகைக்கு நன்றி. உங்கள் எழுத்துக்களின் இரசிகருள் நானும் ஒருவன்
//கீதா சாம்பசிவம்//
ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத்தோன்றும். போளி சாப்பிட்டு நீங்களும் போளி இரசிகராக வாழ்த்துக்கள்.
+ & :-))
//முத்துகுமரன்//
போலியைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அது ஒரிஜினல் போளிதானா என பார்த்து வாங்குங்கள்
Post a Comment
<< Home