3328 சன்னல்களை யார் துடைப்பது?
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (மே 26) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் புதிய இரயில்நிலையம் திறக்கப்பட்டது. சில சுவாரஸ்ய தகவல்கள்.
- பரப்பளவு 90000 சதுர மீட்டர். 15 கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்குச் சமம்.
- 85 கிலோமீட்டர் நீளமுள்ள இரும்புத்தூண்கள் நிலையத்தை தாங்கிப்பிடித்துள்ளன.
- 0.5 மில்லியன் கியூபிக்மீட்டர் கான்கிரிட் கலவையும், 85000 டன் இரும்பிக்கம்பியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
- 5 அடுக்குகளைக் கொண்ட நிலையத்தில், 54 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 34 லிப்டுகள் உள்ளது.
- 9000 விளக்குகளும், 3328 கண்ணாடி பலகைகளும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு நாளும் 1100 வண்டிகள் வந்து போகும் மேலும் நாளொன்றுக்கு 300000 பயணிகள் வந்து போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மொத்த செலவு: 700 மில்லியன் ஈரோ.
0 Comments:
Post a Comment
<< Home