இந்தோனேசியாவில் தமிழர்கள்.
அஸ்வின், அரி சப்தவிஜயா, இந்திராவதி.... இவர்களெல்லாம் பல்கலைக்கழகத்தில் என்னுடைய சக மாணவர்கள். இவர்கள் அனைவரும் இந்தோனேசியாவிலிருந்து வருபவர்கள். புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் இப்பெயர்கள் ஒன்றும் வித்தியாசமாகத் தோன்றவில்லை எனக்கு. ஆனால் இன்னொரு மாணவனின் பெயர் கிருஷ்ணாதி. இம்மாணவன் ஒரு முஸ்லிம்.
சென்ற வாரம் இந்தோனேசியர்களால் சுனாமி நிதி திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கே இந்தோனேசியாவைப் பற்றி ஒரு விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்தி ஒன்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கி.பி. 5 முதல் கி.பி. 15 ஆம் நுாற்றாண்டு வரை இந்தோனேசியா ஒரு இந்து நாடாக இருந்து வந்துள்ளது. அதன் பிறகே அங்கு அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவில் தமிழர்களும் அதிகளவில் வாழ்வதாக Jakarta Post-ல் வெளிவந்துள்ள கட்டுரையில் படித்தேன்.
அந்த கட்டுரையில் ஆச்சர்யப்படவைக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால் இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காராக விளங்கும் லஷ்மி மிட்டால் 1970-ல் இந்தியாவை விட்டு இந்தோனேசியாவிற்குத் தான் முதலில் சென்றாராம்.
4 Comments:
இந்தோனேசியா பாலி தீவில் இப்போதும் பெரும்பான்மையான மக்கள் இந்துக்களதானாம்.
இந்த தலைப்பைப்பற்றி நீண்டநாளாகவே படிக்கவேண்டும் என்ற ஆசை.ஒரு சமயம் இந்திரவர்மன் தொடங்கி ஒரு கட்டுரை எழுதலாம் என்று தொடங்கினேன். ஆனால் அது ஒரு பத்தியோடு நின்றுவிட்டது!
இந்தோனேஷியாவில் மூஸ்லீம்களும் இந்து பெயர்களுடன் இருப்பது வெகுசகஜமே. அது உண்மையில் நமது இந்து மன்னர்கள் இந்தோனேசியாவில் நிறுவிய அரசாட்சியின் எஃபக்ட். என்னுடன் வேலைபார்க்கும் ஒரு இந்தோனேஷியா பெண்ணின் பெயர் sayafitiri, பெயர் காரணத்தை துருவி பார்த்ததில் அது பிறந்தது 'சாவித்திரி' என்பதில் இருந்து மறுவியது தான் மேல் சொன்ன பெயர் :-)
Muthu, Jeeva and Vijay Thanks for your feedbacks....
One more information I got on that day is 1% of Indonesia's population are Hindus.
Post a Comment
<< Home