ஜுரிச் ஒரு நாள் பயணம்
ஜுரிச் பலரும் நினைப்பதுபோல சுவிட்சர்லாந்தின் தலைநகரம் அல்ல. பெர்ன் நகரமே அதன் தலைநகரம். சுவிட்சர்லாந்து ஐரோப்பிய யூனியனிலும் உறுப்பினர் கிடையாது. அதனால் அங்கு இன்னமும் சுவிஷ் பிராங்க் பணம் தான் உபயோகத்தில் உள்ளது. ஜுரிச் நகரை மலையும், மலை சார்ந்த நகரம் எனலாம். எங்கு திரும்பினாலும் பசுமையான மலைகள் தான். சென்ற மாதம் ஒரு நாள் வேலையாக அங்கு சென்றபோது, கிடைத்த நேரத்தில் சற்று சுற்றி பார்த்தேன்.
பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.
1) ஜுரிச் ஏரி

2) ஏரியின் அருகில் தேவாலயம்

3) Bahnhof Strasse (இரயில் நிலைய தெரு)
இந்த தெருவில் தான் உலகப் புகழ்பெற்ற வங்கிகளான UBS, Credit Suisse வின் தலைமையகம் உள்ளது.


மேலும் நேரம் இருந்தால் Museum மற்றும் Zoo வை பார்க்கலாம்.
- சுவிஷ் பிராங்க் பணம் புழக்கத்தில் இருந்தாலும் எல்லா கடைகளிலுமே ஈரோ பணம் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் சில்லரை பிராங்கில் தான்.
- உள்ளூர் பயணத்திற்கு டிக்கட் எடுக்கும் மெஷின்களில் நாணயம் மட்டுமே போட முடியும். பண நோட்டுகளை செலுத்த முடியாது. இரயில் மற்றும் Tram வண்டிகளும் பழையதாக உள்ளது. ஜெர்மனி இந்த தொழில்நுட்ப விடயத்தில் ஒரு முன்னோடியாகவே உள்ளது.