.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, February 24, 2005

அம்மா அம்மம்மம்மா.......... No Comments...

இவர்களெல்லாம் முன்னால் அமைச்சர்களா, இந்நாள் அமைச்சர்களா தெரியாது.

வைத்தியலிங்கம்


தம்பிதுரை


தளவாய்சுந்தரம்


சுகாதாரதுறை செம்மலை


சண்முகநாதன்



நிதியமைச்சர் பொன்னையன்


பொதுப்பணித்துறை பன்னீர்செல்வம்.


பாண்டுரங்கன்


சட்ட அமைச்சர் ஜெயகுமார்


ஜுவானந்தம்


தனபால்


அன்வர் ராஜா


வளர்மதி


வேலுச்சாமி

Wednesday, February 23, 2005

புஷ் - ஐரோப்பிய பயணம்


ஐரோப்பா பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் புஷ், நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களோடு விவாதத்தில் கலந்து கொண்டார்.

புஷ் வருகையின் குறிக்கோள்கள்.

1)நேடோ அமைப்பின் எதிர்காலம் பற்றி விவாதிப்பது. புஷ் வருவதற்கு முன்னால் நேடோ அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்று ஜெர்மன் சான்சலர் ஸ்க்ராய்டர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

2)மத்திய கிழக்கு அமைதி/அமெரிக்க நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டுவது.

3)ஈரான், வடகொரியா அணுஆயத பிரச்சனை பற்றி பேசுவது. பொருளாதார சலுகைகளுக்கு மாற்றாக அணுஆயுத திட்டத்தை கைவிடுமாறு பிரான்சும், ஜெர்மனியும் ஈரானுடன் பேரம் தொடங்கியுள்ளனர்.

4)சிரியாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை பற்றியும் விவாதிக்கிறார்.

5)இவையெல்லாவெற்றிற்கும் மேலாக, ஈராக் போருக்கு பின்னால் பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஏற்பட்ட சுணக்கத்தை சரிப்படுத்துவது.

இன்று ஜெர்மனிக்கு சில மணி நேரங்கள் வருகை தருகிறார். புஷ் சின் இந்த வருகைக்கு பலமான எதிர்ப்பு இருப்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Tuesday, February 22, 2005

கடவுள் மனிதனைப் படைத்த போது... - ஒரு நகைச்சுவை துணுக்கு

கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.

கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்

கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.

நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

குரங்கு: எனக்கு 10 வருடங்களே போதும் சாமி.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.


அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப் போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்.


நன்றி: மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர்களுக்கு.

மறக்க முடியாத முகங்கள் - ரஜினி

அம்மா வந்தால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாதென்பார்
அம்மாவின் கூட்டணிக்கே வாக்கு என்பார்

வீரலட்சுமி என்பார்
ஆனால் மறைந்து நின்று சைட் அடித்ததாகவும் சொல்வார்

என்னப்பா இன்னும் அந்த கெட்ட பழக்கத்தை விடலையா?

பாபா வெற்றியடைந்தால் சினிமாவுக்கே முழுக்கு என்பார்
ரசிகர்கள் பாபா வெற்றியென்பார்
பாபாவோ ஜக்குபாயாகி சந்திரமுகியானார்



சூப்பர் ஸ்டாரை சூப்பர் தாத்தாவாக்க கலைஞரின் அறிவுரை.