.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Sunday, December 18, 2005

Advents ஞாயிறுகள்

கிறிஸ்துமஸ் க்கு முந்தைய நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், Advents ஞாயிறு என்று ஜெர்மனியிலும் மேலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இன்று கடைசி Advents ஞாயிறு. இந்த விழாவைப் பற்றி எனக்கு தெரிந்தது அவ்வளவு தான். For more info contact www.google.com. நண்பர்களோடு சேர்ந்து கொண்டாட எனக்கும் அழைப்பு வந்தது.

ஒரு சில பாடல்கள், சிறிய நாடகம், Platzchen (A typical german christmas cake), நல்ல சாப்பாடு என இனிதே முடிந்தது. அங்கே பாலிமர் களிமண் (Polymer Clay) கொண்டு நான் செய்த யானை.
Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com

Saturday, December 17, 2005

என் ஜன்னலுக்கு வெளியே

இன்று காலை குளிர் காலத்தின் முதல் பனி. ரம்மியமான காட்சி.
Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com

Wednesday, December 14, 2005

கூகிளிசம் (googlism)

கூகிள் தெரியும். கூகிளிசம்? www.googlism.com
கூகிள் நம்மைப் பற்றி என்ன சொல்கிறதென்று சொல்கிறார்கள் இங்கே. சரி நம்மைப்பற்றி என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று என் பெயரை (saravanan) கொடுத்தேன். ஊரில் உள்ள எல்லா சரவணனைப் பற்றியும் சொன்னது. கடைசி வரியில் என்னைப் பற்றியும் சொன்னது.

saravanan is a psyco?? :-(

Image hosted by Photobucket.com

Monday, December 12, 2005

ஹல்லே (சாலே) பயணம்

சில வேளைகளில் சில வேலைகளை செய்யாமலிருப்பது தான் நல்லது. நேற்றிரவு சரியாக 12.30 மணி. வலைப்பதிந்து விட்டு உறங்க நினைத்தேன். சரி. gmailஐ ஒருதடவை செக் பண்ணிடுவோம்னு நினைச்சா அங்கே சனியன் சம்மணமிட்டு உட்காந்துகிட்டு இருக்கு. அப்போது தான் நண்பர் ஒருவர் மடல் அனுப்பியிருந்தார். இந்த மடலை இன்றிரவே படித்துவிட்டால் உடனே பதில் எழுது. நாளை காலை 11 மணிக்கு தயாராய் இரு. ஹல்லே போவோம் என்று. சனியன்னு என் நண்பரைச் சொல்லலீங்க. என் விதியைச் சொன்னேன். அதிகாலை 9.30 ;-) மணிக்கெல்லாம் எழுந்து சூரிய நமஸ்காரம் பண்ணுவோம்னு நினைச்சா சூரியனைக் காணவில்லை. யாராவது பார்த்தா அவனை இந்த பக்கம் வரச் சொல்லுங்க. இன்றைக்கு முழுவதுமே இங்கே லீவு போட்டுட்டார். சரியா 11.15 க்கு கிளம்பி மதியம் 1 மணிக்கெல்லாம் போய்ச் சேந்தாச்சு. நண்பரின் கஸ்டமர் ஒருவரை சந்திக்க சென்றோம். இன்னைக்குன்னு சரியான குளிர். கஸ்டமரோ கட்டடம் கட்டும் பணியில் இருப்பவர். இழு இழுன்னு பேச்சை இழுத்துக்கிட்டே போனார். Sweat Shirt, Jacket போட்டிருந்தாலும் வேலைக்காகலை. குளிரிலேயே 4 மணி நேரம் நின்னேன். எனக்கு ஜெர்மன் மொழி மெதுவா பேசினாலே 50% தான் புரியும். ஆனா அவிங்க புல்லட் ரயில் வேகத்துல பேசுறாங்க. எனக்கு எல்லாம் புரியிறது மாதிரி தலையாட்டிகிட்டே நின்னேன். ஒரு வழியா 9 மணிக்கு வீட்டுக்கு வந்தாச்சு. மணி இப்போ இரவு 11. கணடிப்பா இன்னைக்கு ஒரு வேலை செய்யக்கூடாது. என்ன வேலைங்கறீங்களா?. முதல்ல இருந்து திருப்பி படிங்க.

பிறந்தநாள் வாழ்த்து

டிசம்பர் 11. அவசரப்படாதீங்க. பிறந்தநாள் வாழ்த்து பாரதியாருக்கில்லை. பாரதியார் பிறந்தநாள் ஞாபகம் வர்றதே எங்க அண்ணன் பிறந்தநாள் ஞாபகம் வரும் போது தான். அவருக்கும் அன்னைக்குத்தான் பிறந்தநாள். Happy Birthday Anna. Same to you Bharathi. Incidentally, எங்க அண்ணன் பொண்ணு பேரும் பாரதி தான். பாரதி தான் தமிழில் எனக்கும் பிடித்த புலவன். பாடப்புத்தகதில உள்ள பாரதியின் கவிதைகள், சினிமா பாடல்களாக மாறிய சில பாடல்கள் மூலமாக மட்டுமே பாரதியை அறிவேன். கோவில்பட்டியில் படிக்கிறபோது ஒவ்வொரு வாரமும் எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீட்டை கடந்துதான் செல்வேன். ஏனோ ஒரு முறை கூட உள்ளே சென்று பார்க்கவேண்டும் என்று தோணவில்லை. கண்டிப்பா அடுத்த தடவை பார்க்கணும்.

Saturday, December 10, 2005

என் கதை முடியும் நேரமிது

ரஜினி பேன் (விசிறிங்க, தலையில உள்ள பேன் இல்ல), கமல் பேனெல்லாம் என் கம்ப்யுட்டர் கிட்ட தோத்துடுவாங்க. ஆன் பண்ணினா 2 நிமிஷம் ஒரே விசில் சத்தம் தான். ஒரு வாரமா இப்படித்தான் இருக்குது. எனக்கென்னமோ அந்த சத்தம் சங்கொலி மாதிரியே இருந்தது. என் கதை முடியும் நேரமிது ன்னு கணி பாடுது. கூகிள் ஆண்டவனை நாடி வரம் வேண்டினேன். இது ஒண்ணும் புதுசு இல்லை நைனா. வயசாயிடுச்சு உன் பேனுக்கு (Processor fan). அவ்ளோதான் னு சொல்லுது. பேனை துடைச்சு பாரு. இல்லாங்காட்டி கடாசிட்டு புதுசு வாங்கிடுங்கறார்.

Friday, December 09, 2005

சென்னையில் ஒரு கார்காலம்

சென்னையில் வரலாறு காணாத மழை, வெள்ளம். மீண்டும் மீண்டும் புயல். சாக்கடையாக இருந்த கூவத்தில் வெள்ளப் பெருக்கு. நடந்து கூட செல்லமுடியாத தெருக்களில் மக்கள் படகு சவாரி செய்கிறார்கள். இப்படி சென்னையில் ஒரு கார்காலம் நல்ல கார்- காலமாகவும் ஆகிவிட்டது. வந்தாச்சு வந்தாச்சு B.M.W வந்தாச்சு.
Image hosted by Photobucket.com

180 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் வருகிறது. 6 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும் என ஒப்பந்தம் இருந்தாலும் 2 ஆண்டுகளிலேயெ தொடங்க உள்ளதாம். ஓரளவேனும் வேலைவாய்ப்பு பெருகும். தமிழகத்தில் முதலீடு அதிகரிக்க இது நல்ல சமிக்ஞை.

அடுத்து VW (VolksWagen) சென்னைக்கு வந்துட்டா Daimler Chrysler (Mercedes) மட்டும் தான் பாககி ஜெர்மனியில்.

தினமலரும் பத்திரிக்கை தர்மமும்

தினமலர் - தமிழ் நாளிதழ். தன்னை இங்கே இவ்வாறு கூறிக்கொள்கிறது.

1) Renowned for social awakening and public causes.
2) Non-Aligned to any political party or religion.

1) கடந்த ஒரு வருடமாக மீனாட்சியம்மன் கோவிலை உலக அதிசயமாக்க பிரச்சாரம் செய்கிறார்கள். அதுவும் ஒரு தனியார் நிறுவனத்திற்காக. கண்டிப்பாக அது மன்னார் & மன்னார் கம்பெனி தான். இது தான் தினமலரின் சமுதாய விழிப்புணர்வு (social awakening)

2) தினமலரை இணையத்தில் திறந்தாலே ஒரு சாமி (இந்து) படம் தான் கண்ணில் படும். சரி விசேட நாட்களில் போட்டால் பரவாயில்லை. எங்காவது ரோட்டோர பிள்ளையாரை யாராவது குளிப்பாட்டினால் கூட கும்பாபிஷேகமாக தலைப்புசெய்தியில் வருகிறது. Is this Non-aligned to any religion?

முதல் பாயின்டை பற்றி எனக்கு ஒரு கேள்வி. பத்திரிக்கையின் மீது தவறான தகவல் பரப்புவதாக வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?

Thursday, December 08, 2005

யாமிருக்க பயமேன்?

http://tringtring.blogspot.com - இல் இருந்து சுட்டது

Image hosted by Photobucket.com

புல்ல்ரிக்கவைக்கும் ரசிகர்கள.

R.S.S, BJP எல்லாம் ஏன் தொடப்பக்கட்டையை தூக்கலை?.

Monday, December 05, 2005

நாய் குட்டி

மடிக்கணியும் நாய்குட்டியும் வைத்திருக்கிறீர்களா? இங்கே பாருங்கள்

Image hosted by Photobucket.com

Sunday, December 04, 2005

பெண்ணியம்

பெண்ணியம் பேசுபவர்களுக்காக மட்டும் ;-)

Image hosted by Photobucket.com

Saturday, December 03, 2005

பீவிஷ் & பட்கெட்

MTV ல பீவிஷ் & பட் கெட் ரொம்ப பேமஷ. always they talk shit. இவுங்க தான் இப்போ ஷோ நடத்துறாங்க.
Image hosted by Photobucket.com

Friday, December 02, 2005

முதலாளி

Image hosted by Photobucket.com