.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, March 31, 2005

Thirukகுறளின் 134வது அதிகாரம்

Thiruகுறளின் 134வது அதிகாரம் (IT அதிகாரம்) சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த அதிகாரம் பின் வருமாறு

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் codingகெழுதியே சாவர்

எம்மொழி மறந்தார்க்கும் job உண்டாம்
jobஇல்லை 'C'யை மறந்தார்க்கு

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்

Netல் தேடி copy அடிப்பதின்
மூலையிலிருந்து logic யோசி

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் syntax error

எது தள்ளினும் projectல் requirement
தள்ளாமை மிகச் சிறப்பு

Chatடெனில் yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று

Bench Project email இம்மூன்றும்
programmer வாழ்வில் தலை.

நன்றி:- இதுபோல அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் சென்னை வெங்கட்ராமனுக்கும், குவைத் சுப்ரமணியனுக்கும். இவர்களால் தான் என் ப்ளாகே ஓடுது.

Wednesday, March 30, 2005

இப்படியெல்லாம் செய்தால் நீங்கள் இந்தியர்கள்...

இப்படி எனக்கு ஒரு பெரிய மடல் வந்தது. அதில் இந்தியர்கள் செய்யும் பல விசயங்கள் நையாண்டியுடன் சொல்லப்பட்டுள்ளது. எல்லாமும் எல்லாருககும் பொருந்தாவிட்டாலும் அதில் பல ரசிக்கத்தக்கதாகவே உள்ளது.

பெரிய லிஸ்டாக உள்ளதால் மொழிபெயர்த்து என் தமிழ் பதிவில் பதியும் எண்ணமில்லை. பார்க்க விரும்புபவர்கள் இங்கே (என் ஆங்கில பதிவில்) பார்க்கலாம்

முப்பரிணாம(3D photos) படங்களை பார்ப்பது எப்படி?- Parallel Viewing

முப்பரிணாம படங்களை அவ்வப்போது ஆனந்தவிகடனிலோ வேறு பத்திரிக்கைகளிலோ பார்க்கலாம். இந்த 3D படங்களை பார்ப்பதில் Parallel Viewing என்ற நுட்பமும் அடங்கியிருக்கிறது. இந்த Parallel Viewing-ஐ நாமே 30 நொடிக்குள் செய்து பார்க்கலாம். இதன் பெயர் Frankfurter Experiment. நீங்கள் சரியாக செய்யும் பட்சத்தில் உங்கள் விரல் கீழேயுள்ள படத்தில் உள்ளது போல அந்தரத்தில் தொங்கும்.
Image hosted by Photobucket.com

இதை செய்யும் பொழுது கணிணியை பார்த்து செய்யகூடாது.

1) துாரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை பாருங்கள். உங்கள் பார்வையை அந்த பொருளின் மீதே வைத்திருங்கள்.

2) இப்போது மேலே உள்ள படத்தில் உள்ளது போல இரண்டு சுட்டுவிரல்களையும் தொடுமாறு வைத்துக்கொண்டு, உங்கள் பார்வை கோட்டின்(line of sight)பாதையில் நிறுத்துங்கள். உங்கள் விரல்களை பார்க்க முயற்சிக்காதீ்ர்கள். துாரத்தில் உள்ள பொருளையே பாருங்கள்.

3) இரு விரல்களையும் சிறிது இழுங்கள். இப்போது அந்தரத்தில் உங்கள் விரலின் சிறிதுபாகம்
தொங்கிக்கொண்டிருக்கும். பின் விரல்களை மெல்ல மேலும் கீழும் ஆட்டலாம். எக்காரணத்தைக்கொண்டும் விரல்களை பார்க்க முயற்சிக்காதீர்கள்.

இந்த நுட்பம் 3D படங்களை பார்ப்பதிலும் பயன்படுகிறது.

Tuesday, March 29, 2005

ரோபோகப் - RoboCup

ரோபோட் (Robot) என்ற சொல் செக்கஸ்லோவியாகாவில் இருந்து வருகிறது. அதன் பொருள் அடிமை என்பதே. நான் இங்கு கூறவருவது வருடந்தோறும் நடைபெறும் ரோபோகப் பற்றியே. இந்த போட்டியின் நோக்கம் 2050 ஆம் ஆண்டிற்குள் கால்பந்தாட்டத்தில் தனித்து இயங்கக்கூடிய, மனிதர்களை வெல்லக்கூடிய ரோபோக்களை வடிவமைப்பது தான். சென்ற வருடம் இப்போட்டி போர்ச்சுகலி்ல் நடந்தது. அங்கு கால்பந்து ஆடிய ரோபோக்களின் வீடியோ (10 MB) படத்தை இங்கே பார்க்கலாம். 2005 ஆம் ஆண்டு இப்போட்டி ஜப்பானில் நடக்கிறது. இந்த போட்டியில் பலவிதமான ரோபோக்களை பார்க்கலாம். குறிப்பாக தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்துவது, இயற்கை சீற்றங்களின் போது உபயோகப்படுத்துவது என பலவற்றை பார்க்கலாம்.

Sunday, March 27, 2005

இந்தோனேசியாவில் தமிழர்கள்.

அஸ்வின், அரி சப்தவிஜயா, இந்திராவதி.... இவர்களெல்லாம் பல்கலைக்கழகத்தில் என்னுடைய சக மாணவர்கள். இவர்கள் அனைவரும் இந்தோனேசியாவிலிருந்து வருபவர்கள். புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் இப்பெயர்கள் ஒன்றும் வித்தியாசமாகத் தோன்றவில்லை எனக்கு. ஆனால் இன்னொரு மாணவனின் பெயர் கிருஷ்ணாதி. இம்மாணவன் ஒரு முஸ்லிம்.

சென்ற வாரம் இந்தோனேசியர்களால் சுனாமி நிதி திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கே இந்தோனேசியாவைப் பற்றி ஒரு விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்தி ஒன்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கி.பி. 5 முதல் கி.பி. 15 ஆம் நுாற்றாண்டு வரை இந்தோனேசியா ஒரு இந்து நாடாக இருந்து வந்துள்ளது. அதன் பிறகே அங்கு அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவில் தமிழர்களும் அதிகளவில் வாழ்வதாக Jakarta Post-ல் வெளிவந்துள்ள கட்டுரையில் படித்தேன்.

அந்த கட்டுரையில் ஆச்சர்யப்படவைக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால் இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காராக விளங்கும் லஷ்மி மிட்டால் 1970-ல் இந்தியாவை விட்டு இந்தோனேசியாவிற்குத் தான் முதலில் சென்றாராம்.

Saturday, March 26, 2005

Optical Illusion.

அல்வாசிட்டி அவர்களின் பதிவில் அரூபம் என்று ஒரு பதிவு இட்டிருந்தார். அதைப்பற்றி கூகிளிய போது www.eyetricks.com என்ற இணைய பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அதில் இதைப் போல பல படங்கள் இருக்கின்றன.

சில இங்கே.

இதில் எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன என கணெக்கெடுக்க முடியுமா?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஆத்திசூடி என்றால் என்ன?

TSCII இணைய குழுமத்தில் நண்பர் ஒருவர் ஆத்திசூடி என்ற வார்த்தைக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை கேடடிருக்கிறார். இருவேறான பதில்களை நான் படித்தேன்.

ஒருவர் ஆத்தி என்பது ஒரு மலர் என்றும், சூடி என்பது சூடுவது என்றும் கூறுகிறார். இதன்படி aathi adorned என்று கூறலாம் என்கிறார்.

இன்னொருவர் சூடி என்பது சுவடி என்பதன் மறுவலாகவும், ஆத்தி என்பது ஆதி என்பதன் மறுவலாகவும் இருக்கலாம் என்கிறார்.

இதன் உணமையான பொருள் அறிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

Friday, March 25, 2005

Nasdaq-100 சானியா முதல் சுற்றில் தோல்வி

மியாமி-யில் நடைபெற்று வரும் Nasdaq-100, WTA Tour போட்டியின் முதல் சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த சாங்செச் லொரென்சோவிடம் 2-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Thursday, March 24, 2005

சுனாமி நிதி - டிரெஸ்டனில் இசை நிகழ்ச்சி

இன்று டிரெஸ்டன் பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்ட ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியர்கள் தனியாக நிதி திரட்டி இந்திய செஞ்சிலுவைச்சங்கத்திடம் அளித்திருந்தாலும் இம்முறை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி.

சரியாக இரவு 7.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. டோரின் செய்டோவ்ஸ்கி பெளஸ்ட் (இதை வாசிக்கும் போது வாய் சுளுக்கினால் நான் பொறுப்பல்ல) என்ற ஜெர்மன் பெண்மனி தாகூர் கீர்த்தனைகள் பாடினார். மரியோ பெளஸ்ட் சிதார் வாசிக்க, சிங்கப்பூரில் பிறந்து தற்போது பெர்லினில் வசிக்கும் ரவி சீனிவாசன் தபேலா வாசித்தார். இவர்கள் கடைசியாக இந்துஸ்தானியையும் மேற்கத்திய இசையையும் இணைத்து இசைக்க அதுவே நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.
Image hosted by Photobucket.com

8.00 மணிக்கு சிறிய இடைவேளை. இங்குள்ள இந்திய உணவகம் கடை விரித்திரிந்தார்கள். 5 நிமிடத்தில் மாங்கோ லஸ்ஸியைத் தவிர அனைத்துமே காலியாயிருந்தது.

8.30 மணிக்கு புதுதில்லியிலிருந்து வந்திருந்த பேராசிரியர் சுபேந்து கோஷ் வட இந்திய இசையும், தென்னிந்திய கர்நாடக இசையையும் இசைத்தார். பல நாட்டை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 400 முதல் 500 பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
Image hosted by Photobucket.com

சொல்ல மறந்துட்டேனே. இடைவேளையின் போது உண்டியல் குலுக்கினோம். மேலும் அரங்கிற்கு வெளியேயும் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. கணிசமான உதவி கிடைத்தது.
விரைவில் இப்பணம் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும்.

Wednesday, March 23, 2005

நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால்?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் -ன்னு தமிழ் பாட்டு இருக்குது. அந்த படத்தில் ஜெமினி பாடுவாரான்னெல்லாம் எனக்கு தெரியாது. இது ஜெமினிய பத்தி கிடையாது. ரெண்டு நாளா நான் நினைக்கிறது எதுவுமே நடக்கலை. அது உட்காந்துகிட்டிருக்குன்னு யாரும் கடிச்சுடாதிங்க. அப்படி என்னய்யா நடக்கலைன்னு அதை தெரிஞ்சுக்க ரொம்பபேருக்கு ஆசையா இருக்கும். அவங்களை நான் ஏமாத்த விரும்பலை. என் ஆங்கில பதிவில் ஒரு சாம்பிள் பார்க்கலாம்.

நினைச்சது கிடைக்கலேன்னா கிடைச்சதை நினைச்சுக்கோன்னு பலபேரு சொல்லிட்டாங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு இந்த சின்ன பையனுக்கு பின்னுாட்டத்தில சொல்லுங்க.

Friday, March 18, 2005

Nuke Shop

Image hosted by Photobucket.com

Wednesday, March 16, 2005

மின்னஞ்சலில் எரிதங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்

This is just a repost. Suddenly I lost this post yesterday... Some people say its because of long title.... So I have reduced the title length

தமிழில் scientfic journal வெளிவர இருப்பதாக முத்து எழுதியிருக்கிறார். வலைப்பதிவுகளில் கூட சிலர் அறிவியலைப் பற்றி எழுதுகிறார்கள். சரி நம்மளும் நமக்குத் தெரிஞ்சதை எழுதுவோமே.
போன வருசம் Practical Data Mining-னு ஒரு பாடம் படிச்சேன். வாத்தியார் Dr.பேட்டர் கிரிகேரியோவ். ரஷ்யாகாரர். Guest Lecture குடுக்க வந்தாரு. Machine Learning, Mining algorithms-னு என்னென்னமோ நடத்துனாரு. புரிஞ்சா தானே.


கடைசியா பரிட்சை இவ்வளவு தான். ஒவ்வொருத்தருக்கும் 2000 மின்னஞ்சல்களை கொடுத்துட்டாரு. QuDA-வை (அவரே எழுதியது தான்) வைச்சு அதிலுள்ள எரிதங்களையெல்லாம் கண்டுபிடிக்கனும். கண்டுபிடிச்சு மார்க் வாங்கியாச்சு. இதெல்லாம் யாருக்கு வேணும்கிறிங்களா.

என்ன விசயம்னா எரிதங்களை வகைப்படுத்தும்போது 100% கண்டுபிடிக்க முடியறதில்லை. இன்றைக்கு வணிகரீதியாக பல நல்ல மென்பொருள்கள் வந்துடுச்சு. ஆனாலும் Rediff போன்ற இலவச மின்னஞ்சல் வசதி கொடுப்பவர்கள் தரமான spam filter உபயோகப்படுத்துவதில்லை. பலமுறை முக்கியான மடல்கள் JunkMail folder க்குள் போய்விடுகிறது. அதனால் JunkMail or BulkMail போல்டரை தினந்தோறும் பாக்கலைனா கூட வாரத்துக்கொருதடவையாவது பாக்குறது நல்லது. இதுல இன்னொரு பிரச்சனை என்னான junkmail-ஐ நீக்கினால் அது நிரந்தரமாக நீங்கிவிடும்(in rediff, not sure about others). குப்பைத்தொட்டி (Trash) போல்டருக்கு போகாது. எனவே கவனம் தேவை.

Tuesday, March 15, 2005

பத்தாயிரம் ரூபாய்க்கு கணிணி.

ரீடிப்பில் இந்த செய்தியை படித்தேன். கொல்கத்தாவைச் சேர்ந்த Xenitis Infotech என்ற நிறுவனம் 9900 ரூபாய்க்கு கணிணி விற்க ஆரம்பித்துள்ளது. இப்போது தென்னிந்தியாவைத் தவிர மற்ற இடங்களி்ல் அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் தென்னிந்தியாவிலும் விற்பனையைத் துவக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர மக்கள் கணிணி வாங்க முன்வருவார்கள் என்பது நிச்சயம். இது சிரிக்ஸ் பிராசருடன் வருகிறது என்பது கவனிக்க வேண்டிய விசயம். Intel மற்றும் AMD அளவுக்கு தரம் இருக்காது என்றாலும் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் அனைவரும் விரும்பி வாங்குவார்கள் என நினைக்கிறேன்.

இதன் மற்ற பாகங்களைப் பற்றி அறிந்தவர்கள் எவரேனும் எழுதினால் நல்லது.