.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, May 11, 2006

தேர்தல் முடிவுகள்

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயணசுவாமி. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நண்பகல் முடிவடைந்தது. இத்தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தமிழக மக்கள் ஒரு அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.

தேர்தல் முடிவுகள்.

தி.மு.க கூட்டணி 60
அ.தி.மு.க. கூட்டணி 50
தே.மு.தி.க. கூட்டணி 30
சுயேட்சைகள் 94

அனைத்து கூட்டணிகளும் தேர்தல் அறிக்கையில் சகலவிதமன இலவசங்களை அறிவித்திருந்தனர். மக்களை முட்டாள்களாக கருதிய இக்கட்சிகளுக்கு பாடம் புகட்டவே மக்கள் இவ்வாறான ஒரு முடிவை எடுத்து சுயேட்சைகளை அதிகளவில் வெற்றிபெற செய்துள்ளார்கள். வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர்களும் மக்களின் இந்த முடிவை ஆதரித்து, தாங்கள் எந்த ஒரு கூட்டணியையும் ஆதரிக்காமல் எதிர்க்கட்சியாக செயல்படபோவதாக அறிவித்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் தே.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. இக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அறிவித்துள்ள இலவசங்கள் எல்லாம் தங்களுக்கு கிடைக்குமா என்பதே தமிழக மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது!!!.

Saturday, May 06, 2006

இலவசம்

கலைஞர்:
Photobucket - Video and Image Hosting
உடன்பிறப்பே,
உறக்கத்தை விடு,
சமையல்கூடாரம் இடு,
இட்லி, தோசையை சுடு,
பசித்தோருக்கெல்லாம் கொடு,
தமிழனை முட்டாளாக இருக்க விடு.

செல்வி:
Photobucket - Video and Image Hosting நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, தமிழகமே பஞ்சத்தில் கிடந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் இட்லி, தோசை கொடுப்பார்களாம். அது முடியாத காரியம். ஏனென்றால் அவ்வளவு பேருக்கும் சேர்த்து மாவாட்ட தமிழ்நாட்டில் பெரிய கிரைண்டர் இல்லையே?? அதனால் தான் நான் சொல்கிறேன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் தினந்தோறும் பிரியாணி பொட்டலம் வழங்குவோம்.


கேப்டன்:

Photobucket - Video and Image Hosting
ஒரு தமிழனுக்கு சாப்பாடு இல்லைன்னா நான் அந்த தமிழனுக்கு சாப்பாடு கிடைக்கிறவரை சாப்பிடமாட்டேன். நான் தான் முதல்ல சாப்பாடைப்ப்த்தி பேசினேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு வந்து புல் மீல்ஸ் வழங்குவோம். அய்யா சாமி, அம்மா தாயே சோறு போடுங்கம்மா.. சீசீ ஓட்டு போடுங்கம்மா !!

Thursday, May 04, 2006

போலியும் அதன் பரிமாணங்களும்

போலி என்று சொன்னால் , இன்று தமிழ் வலைப்பதிவுலகமே நடுங்குகிறது. ஏன் என்று தான் புரியவில்லை. ஆனால் நான் என்றுமே போலியின் முதல் ரசிகனாக இருந்து வந்திருக்கிறேன். அதன் பல பரிமாணங்களையும் பார்த்து, ரசித்து, சுவைத்திருக்கிறேன். இங்கே உங்கள் மனம் குளிர போலியின் பல வகையான பரிமாணங்களையும் கொடுத்திருக்கிறேன்.

போலியிலே சிறந்த போலி ஸ்ரி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போலி தான்.





Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting
தேங்காய் போலிஇனிப்பு போலி

Photobucket - Video and Image Hosting
மசாலா போலி

பின்குறிப்பு: போளி உண்ட மயக்கத்தில் போளி போலி ஆகிவிட்டது.

Wednesday, May 03, 2006

பிரமோத் மகாஜன் காலமானார் - பி.பி.சி. செய்தி

Photobucket - Video and Image Hosting
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுல் ஒருவரான பிரமோத் மகாஜன் இன்று காலமானார். பி.பி.சி. செய்தி