.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Tuesday, April 12, 2005

இரயில்வே தேர்வாணையத்திற்கு மேலும் சில கேள்விகள்

இரயில்வே தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பற்றி பாஸ்டன் பாலா எழுதியிருக்கிறார்.

தேர்வாணையத்திற்கு என்னால் முடிந்த உதவி இங்கே.

1) கமலகாசனிடம் முத்தம் வாங்காத நடிகை யார்?
சுகன்யா
வசுந்தரா தாஸ்
அபிராமி
நதியா

2) பாபாவில் ரஜினியின் கதாநாயகி யார்?
நயன்தாரா
ஜோதிகா
சிம்ரன்
மனிஷா கொய்ராலா

3) (தரு) தல என்று இரசிகர்களால் அறியப்படுபவர் யார்?
விஜய்
விஜய்காந்த்
அஜித்
ரஜினி

4) ரீமேக் நாயகன் யார்?
ரவி
தனுஷ்
சிம்பு
சிபி

5) முதலமைச்சராக நினைப்பவர்கள் யார்?
ரஜினி
விஜயகாந்த்
சரத்குமார்
எல்லா நடிகர்களுமே

Wednesday, April 06, 2005

Nokia- Made in Chennai.

நோகியா செல்பேசி நிறுவனம் சென்னையில் தனது செல்பேசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது - இந்து செய்தி

முதலில் 24 மில்லியன் செல்பேசிகளை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. GSM மற்றும் CDMA தொழில்நுட்ப செல்பேசிகள் இங்கு தயாரிக்கப்படும். செல்பேசிகளை இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். இனி வெளிநாடுகளிலும் விரைவில் Made in India வை பார்க்கலாம்.

Tuesday, April 05, 2005

GMail infinity+1 storage and Google Gulp

ஏப்ரல் 1 ஆம் தேதி கூகிள் வழங்கும் ஜிமெயிலுக்கு முதல் பிறந்தநாள். GMail மின்னஞ்சலில் infinity+1 storage வழங்க இருக்கிறார்கள். infinity+1 என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் அதை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளார்கள். இங்கே காண்க.

கூகிள் அறிமுகப்படுத்தும் பானம் Google Gulpஐ பற்றி மேலும் அறிய.

Monday, April 04, 2005

அந்த குரங்கின் விலை மட்டும் 10000 டாலரா?

குரங்கு விற்கும் கடைக்கு ஒருவன் சென்றான். அங்கு பல குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. மற்றொருவன் அங்கு வந்து ஒரு குரங்கை 2000 டாலருக்கு வாங்கி சென்றான். அவனுக்கோ ஆச்சரியம். குரங்கின் விலை 2000 டாலரா? கடைக்காரரிடமே சென்று கேட்டான். கடைக்காரர் சொன்னார். அந்த குரங்கிற்கு C Program எழுதத் தெரியும். அதனால் தான் அந்த விலை என்று. இன்னொரு குரங்கைக் காட்டி, அதற்கு JAVA தெரியும் என்றும் அதன் விலை 4000 டாலர் என்றும் கூறினார். அதற்கடுத்தார் போல உள்ள குரங்கு C++ குரங்கு. அதன் விலை 5000 டாலர் என்றார். கடைசியாக ஒரு கூண்டில் உள்ள குரங்கை காட்டி அதன் விலை 10000 டாலர் என்றார். ஏன் அந்த குரங்கிற்கு எல்லாமே தெரியுமா என்று இவன் கேட்க கடைக்காரர் சொன்னார். அந்த குரங்கிற்கு எதுவுமே செய்யத் தெரியாது. ஆனால் மற்ற குரங்குகள் எல்லாம் அந்த குரங்கை Project Leader என்று கூப்பிடுகின்றன.

அல்வாசிட்டி அவர்களின் இந்த பதிவை பார்த்தபிறகு எனக்கு வெகுநாட்களுக்கு முன்பு படித்த இந்த ஜோக் ஞாபகம் வநதது.

Friday, April 01, 2005

மறக்க முடியாத முகங்கள் - ரஜினியும் நிஜ பாபாவும்

Image hosted by Photobucket.com

இந்த பாபாவை தெரிகிறதா?. ரஜினியின் பாபா படத்திற்கு பிரிவியு பார்க்க வந்த இடத்தில் ரசிகர்கள் இடித்ததால் உடல்நலம் குன்றி மரணமடைந்த அதே பாபா தான்.

இது ரசிகர்களின் தவறா? ரஜினியின் தவறா? படம் பார்க்க வந்த பாபாவின் தவறா?