.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Monday, October 18, 2004

கணிணி மொழியில் மிகப்பெரிய நன்றி

சமீபத்தில் ஒரு விவாத மேடையில் பார்த்தது. அதிகம் விளக்கம் தேவையில்லை, ஏதாவது கணிணி மொழி தெரிந்தவர்களுக்கு.

while(1)
{
நன்றி;
}

Sunday, October 17, 2004

கிரிக்கெட்டை ஒழிக்க முடியுமா?

வரவர எனக்கு இந்த கிரிக்கெட் மீது கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டின் மேல் தீராத வெறி கொண்டு அலைந்தவன் தான் நானும். கடந்த சில வருடங்களாக என் வெறுப்பு அதிகரிக்க பல காரணங்கள். அதில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.

கிரிக்கெட் உடற்தகுதியில்லாதவர்களின் விளையாட்டாகவே எனக்கு தோன்றுகிறது. பத்துமாச கர்ப்பம் போல தொப்பை வைத்துக் கொண்டு விளையாடும் வீரர்களை எல்லோரும் நன்கு அறிவீர்கள். அதிலும் சிலர் உலகின் தலைசிறந்த வீரர்களாவர். வேறு எந்த ஒரு விளையாட்டிலும் இந்நிலை உண்டா? ஐந்து நாள் ஆட்டங்களில் தொடர்ந்து ஓடுகிறார்களே, இதற்கும் ஒரு உடற்தகுதி வேண்டுமல்லவா? எனச்சிலர் இடித்துரைப்பார்கள். ஓடுகிறார்கள் தான். ஆனால் இவர்களை தொடர்ந்து ஐந்து கிலோமீட்டர் ஓடச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சினிமாவைப் போல, இங்கேயும் தனிநபர் ஆராதனை. ஆனால் சினிமாவை விட சற்றே குறைவு. ஒரு நாள் ஆட்டமாக இருந்தால் ஒரு நாள் வேலை போச்சு. ஐந்து நாள் ஆட்டமாக இருந்தால் ஐந்து நாள் வேலை போச்சு. இந்திய அணி கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம், பல அலுவலகங்கள், கல்லுாரிகளின் நிலை இது தான். கிரிக்கெட் போட்டி நடக்கும் போதெல்லாம், இந்திய அலுவலகங்களின் உற்பத்தித் திறன் குறைவதாக பல ஆய்வறிக்கைகள் வந்துள்ளதே இதற்கு சான்று.

சரி. முடிந்தால் உங்கள் கருத்துக்களை பின்னுாட்டத்தில் எழுதுங்கள். மேலும் சில விவரங்களை அடுத்த பதிவில் எழுத முடியுமான்னு பார்க்கிறேன்.

Saturday, October 09, 2004

மொழிபெயர்க்க கடினமான வார்த்தைகள்

பிறமொழி வார்த்தைகளை தமிழில் அப்படியே உள்வாங்கிக் கொள்ளலாமா? அல்லது மொழிபெயர்த்து தமிழில் கலைச்சொற்களை அதிகரிக்க வேண்டுமா?. இப்படியெல்லாம் நான் கேட்கவில்லை. பல வலைப்பதிவுகளில், இந்த வழக்கு முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. சரி. தலைப்புக்கு வருவோம். "Today Translations" என்ற இங்கிலாந்து நிறுவனம், 1000 மொழியியலார்களிடம் கருத்துக்கணிப்பு செய்து, மொழிபெயர்க்க மிக கடினமான (ஆங்கிலம் அல்லாத) 10 வார்த்தைகளையும், ஆங்கிலத்தின் 10 வார்த்தைகளையும் வரிசைப்படுத்தியுள்ளது. அதில் செல்லாதிருப்பவர் என்ற தமிழ் வார்த்தைக்கு எட்டாவது இடம். யாராவது இதை மொழிபெயர்த்து, இந்த விடயத்தை செல்லாமல் செய்ய முடியுமா?. சரி. இதைப்போல 10 தமிழ் வார்த்தைகளை வரிசைப்படுத்தினால் என்னென்ன வரும்.

Monday, October 04, 2004

என்ன டைட்டில் வைக்க?

என்கிட்ட ரெண்டு மாசமா ஒரு டிவி இருக்கு. யாரோ (எவனோ) ஒரு புண்ணியவான் (இளிச்சவாயன்) விட்டுட்டுப்போன டிஷ் ஆன்டெனாவும் ரூமுல இருக்கு. சாட்டிலைட் ரிசீவர் பக்கத்து ரூமுல ஓசி வாங்கியாச்சு. ஆனா அதுக்கு தொலைவியக்கி (அதான் ரிமோட்! இதையாவது தமிழ்ல எழுதுவோமே!) இல்ல. அதனால டிவி வேலை செய்யாதுன்னு நானா முடிவு பண்ணி ரெண்டு மாசம் ஆயிப்போச்சு. டிஷ்சையும், ரிசீவரையும் கனெக்ட் பண்ற கேபிள் இல்லாததுனால, முயற்சி பண்ணவே இல்ல. திடீர்னு, சனிக்கிழமை கடைக்குப் போனபோது ஒரு ஞாபகத்துல, அந்க கேபிளை வாங்கிட்டேன். வீட்டுக்குப் போன பிறகு, டிவி வேலை செய்யலேன்னா, அஞ்சு ஈரோக்கு ஆப்புதான்னு அழுதுகிட்டே வந்தேன். மாட்டிப் பாத்தா என்ன ஆச்சர்யம். எல்லா சேனலும் தெரியுது. ஆனா ரிமோட் இல்லாம சேனல் மாத்த தான் கஷ்டமா இருக்கு. சரி சரி போதும் உன் சோககதைன்றிங்களா!!!!!!