.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Wednesday, September 29, 2004

ஒரு பேனாவை எடுங்கள்.

"எப்படி எழுதுவது?" என்று கேட்டால் "கையால தான்" என்று கடிப்பார்கள் சிலர். எப்போதோ, எங்கேயோ படித்த விடயம் ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. "எழுத்தாளனாவது எப்படி?" என்று ஒருத்தர் பலநூறு பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் வெளியிட்டார். வாங்கியவர்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. முதல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்.

"ஒரு பேனாவை எடுங்கள். பின்வரும் பக்கங்களில் உங்களுக்கு தோணுவதை எல்லாம் எழுதுங்கள்".

அந்தப் பக்கத்தை தவிர மற்றவையனைத்தும் வெள்ளைத்தாள்களே.
இதிலிருந்து என்ன தெரிகிறது? என்று நான் ஒன்றும் புதிர் போடப் போவதில்லை. புரிந்தவர்களுக்கு புரியும். எனக்கு புரிஞ்சுடுச்சுப்பா.

Saturday, September 25, 2004

ஜெயலட்சுமி-யக்கோவ்

இன்று யாருடைய நிழற்படம் (அட ஃபோட்டோங்க) பத்திரிக்கைகளில் அதிகமாக வருகிறது என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தோமானால் அது நிச்சயம் ஜெயலச்சுமியாகத் தான் இருக்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் அவர் பலரையும் (காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள்) தன் வழக்கில் சம்பந்தப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இத்தோடு நிறுத்துகிறாரா? இல்லை. எல்லா பத்திரிக்கைகளுக்கும் பல கோணங்களில், பல்வேறு ஆடைகளில் ஒரு மாடல் போல போஸ் கொடுக்கிறார். குற்றாலம், ஊட்டி என்று தான் டூர் அடித்த போட்டாக்களை எல்லாம் தருகிறார். இப்போது வீடியோ ஆதாரமெல்லாம் தன்னிடம் இருப்பதாக இன்னொரு குண்டை போடுகிறார். இந்த மாதிரி பரபரப்பான வழக்குகளினால் யாருக்கு லாபம் என்று பார்த்தால் நிச்சயமாக பத்திரிக்கைகளுக்குத் தான். இத்தனை நாள் (பல வருடங்களாக) ஜெயலட்சுமி காவல்துறை அதிகாரிகளோடு சேர்ந்து செய்த அடாவடிகளையும், கூத்துக்களையும் வெளிக்கொண்டு வராத பத்திரிக்கைகள், இன்று "ஜெயலட்சுமியுடன் ஒரு நாள்" என்று முகப்புக் கட்டுரையே எழுதுகின்றன. "ஜெயலட்சுமி சீரழிந்தாரா? இல்லை சீரழித்தாரா?" என்று பட்டிமன்றம் நடத்துகின்றன. ஜெயலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக்க ஒரு படை கிளம்பியிருக்கிறது. விரைவில் "ஜெயலட்சுமி ஒரு சகாப்தம்" என்று ஒரு நுரல் கூட வரலாம். யார் கண்டது. இன்னும் இது எத்தனை நாளைக்கு? இன்னொரு முறுக்கு பார்ட்டியோ, கஞ்சா செடியோ வரும் வரைக்குத்தான். இதுதான் இன்றைய தமிழ் மக்களின் நிலை.

Thursday, September 23, 2004

ஜக்குபாய் - வெறும் சக்கை - 1

சமீபத்தில் "அழகிய தீயே" என்று ஒரு அருமையான திரைப்படம் பார்த்தேன். ஒரு காட்சியில் "தமிழ்நாட்டில் மட்டும் தான் ஜெராக்ஸ் காப்பிக்கு கூட கை தட்டுவானுங்க" என்று ஒரு வசனம். எவ்வளவு நிதர்சனமான உண்மை. இங்கு தான் ஒரு நடிகன் என்ன செய்தாலும் அதற்கு அர்த்தம் கற்பிப்பதெற்கென்றே ரசிகர்கள் பட்டாளம் ஒன்று காத்திருக்கின்றது. ஊடகவியலார்களும், இவர்களுக்கெல்லாம் நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் எனக்காட்ட மிகவும் மெனக்கெடுகிறார்கள்.

"பாபா" படம் திரைக்கு வந்தபோது அது மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எல்லா பத்திரிக்கைகளும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தன. படப்பிடிப்பு ஆரம்பித்த தினத்திலிருந்தே ரஜினி எங்கு செல்கிறார், என்ன செய்கிறார், எந்த நிறத்தில் ஆடை அணிகிறார் என்றெல்லாம் நேரடி வர்ணனை செய்த பத்திரிக்கைகள் பல உண்டு. ஆனந்த விகடன், குமுதம் போன்ற முன்னணி இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கேட்டால் இது வியாபார சூத்திரம் என்பார்கள். ரஜினியோ ஒரு படி மேலே சென்று, இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் நான் நடிப்பதையே நிறுத்திக்கொள்வேன் (அவருக்கே படம் ஓடாது என தெரிந்துவிட்டது போல) என ரசிகர்களை சூடேற்றிப்பார்த்தார். நடந்ததா? படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டது. இத்தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறினார்கள். சில சுளுவான் குஞ்சுகளோ, ரஜினி வேண்டுமென்றே தான் இப்படிச் செய்தார் என்று சப்பைகட்டு கட்டினார்கள்.

என்னப்பா இது! ஜக்குபாய் என்று தலைப்பை வைத்துவிட்டு, அதைப்பற்றி ஒன்றுமே சொல்லலையேன்னு நினைக்காதீங்க. இன்னும் ஓரிரு நாளில் அதைப்பற்றி எழுதுகிறேன்.

Monday, September 20, 2004

தமிழ் - செம்மொழி

தமிழ் - செம்மொழி


நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

தமிழுக்கு நல்ல காலம் பொறக்குது

என்று குடுகுடுப்பைகாரன் சொல்வது போல அனைத்து அரசியல்வாதிகளும், தமிழ் அறிஞர்களும் இப்போது கூவிக்கொண்டு இருக்கிறார்கள். மகிழ்ச்சி தான் அனைவருக்கும். தமிழர்களாகிய நம் அனைவருக்குமே தமிழை செம்மொழியாக அறிவிப்புச் செய்ததில் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் இந்த அறிவிப்பிற்கு பின்னால் நம்மில் மிகப்பலரைப் போல எனக்கும் சில வினாக்கள் எழுகின்றன.


1) தமிழ் மொழியின் செழுமையையும, தொன்மையையும் உணர்ந்து தான், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதா? அல்லது அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாகவா?

2) இதனால் ஏற்படப்போகும் நன்மைகளை பட்டியலிட்டுள்ள அரசியல்வாதிகளும், தமிழ் அறிஞர்களும், இந்த அறிவிப்பு இல்லாமலே இக் காரியங்களைச் செய்திருக்க முடியாதா?

3) பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் ஐம்பது ஆண்டுகளில் தனித்தனியாகப் பிரிந்துவிடும் எனப் பல புள்ளி விவரங்கள் சொல்கின்றனவே? இதைச் சரிப்படுத்த இந்த அறிவிப்பால் இயலுமா?


என்னைப் பொறுத்தவரையில், முதல் கேள்விக்கு என்ன விடையாக இருந்தாலும் நான் கவலை கொள்ளப் போவதில்லை. எக்காரணமாயினும், தமிழை செம்மொழியாக அறிவித்ததை, தமிழ் மொழிக்கு ஒரு அங்கீகாரமாகவே எண்ணுகிறேன. இன்றைய நாகரிகமற்ற தமிழக அரசியல் சூழ்நிலையில், ஒரு நல்ல காரியத்திற்கு குரல் கொடுப்பதை விட, நான் தான்
செய்தேன், நான் தான் செய்தேன் என்று சுயதம்பட்டம் அடிக்கத் தான் ஆளிருக்கிறார்கள். ஆனால் செம்மொழிகள் என்று மத்திய அரசு, ஒரு பிரிவை ஏற்படுத்தியதன் மூலம் பல மொழிகளை (மேலும் பல அரசியல் நிர்ப்பந்தங்களை) எதிர்கொள்ள
தயாராகிவிட்டது என்று தெரிகிறது.


தமிழ் செம்மொழியானதால், இந்தியாவில் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் தமிழுக்கென ஒரு இருக்கை ஏற்படுத்தலாம். தமிழுக்கு லத்தீன், கிரேக்கம், பாரசீகம், சமஸ்கிருதம் மொழிகளைப் போல, உலக அமைப்புகளிடமிருந்து அங்கீகாரமும், நிதியுதவியும் கிடைக்கும். தமிழர்கள் அனைவரிடமும் ஒரு ஒத்த கருத்து இருந்தும், அரசியல்வாதிகளிடம் சட்டசபையிலும், நாடாளுமனறத்திலும் ஒற்றுமை இல்லாமல் போனதால், இந்த அறிவிப்பிற்காகவே நாம் நூறாண்டு காலம் போராட வேண்டி இருந்தது. இந்நிலையில் இந்த நிதியுதவியை நல்ல வழியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டியது நம் கடமை.

நான் தமிழ்மொழியை, தமிழ் எனற ஒரு பாடத்தின் மூலமாக பள்ளியில் மட்டுமே படித்தவன். இனறு ஐரோப்பாவில் மேற்படிப்பிற்காக வந்தபிறகு தமிழில் பேசுவதும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பேச்சுத் தமிழில் பிற மொழி (குறிப்பாக ஆங்கில) தாக்கத்தை என்னால் நன்றாகவே உணரமுடிகிறது. இது தொடர்ந்தால் நான் எழுப்பிய அந்த
மூன்றாவது வினா, நனவாகிவிடுமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. தமிழ் செம்மொழி அறிவிப்பால், பேச்சுத் தமிழுக்கு என்ன பயன் எனறு கூறுவார் யாரும் இங்கே இல்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கில் ஊடகங்களின் பாதிப்பே அதிகமாக இருக்கின்றது (குறிப்பாக மின்னணு ஊடகங்கள்). இன்றைய காலகட்டத்தில், இந்த ஊடகங்கள், பேச்சுத் தமிழ் வளர்ச்சிக்கு
எதிர்மறையாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கக்கூடிய விடயம். இவ்விடயத்தில் அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள், ஊடகவியலார்கள் மற்றும் பாமரர்கள் ஒன்று சேர்ந்து பேச்சுத் தமிழைக் காப்பது நம் கடமை.


எது எப்படியோ, தமிழ் செம்மொழியாக ஆனது. இது தமிழ் மொழியின் வளர்ச்சியில் மேலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தால் அதுவே உண்மையான வெற்றியாகும்.

Sunday, September 05, 2004

முதல் கிறுக்கல்

யார் யாரோ
என்ன என்னவோ
எதுக்கு எதுக்காகவோ
ஏதாவது இணையத்திலே எழுதிக்கொண்டே இருக்காங்க....

நாமளும் தான் ஏதாவது கிறுக்குவோமேன்னு இந்த வலைப்பூவை ஆரம்பிச்சிருக்கேன்.

எப்படியோ ஒரு வழியா கஷ்டப்பட்டு யுனிகோடை உபயோகப்படுத்தவும் ஆரம்பிச்சுட்டேன். ஆனா இந்த ஆங்கில விசைப்பலகையை வச்சிகிட்டு தமிழ் டைப் பண்றதுக்குள்ளே உயிர் போயிடுச்சு.

மகிழ்ச்சி. எதுக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் எழுதிய சந்தோஷம்.

சரி மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
சரவணன் அண்ணாமலை.

@~CoNtAgIoUs Me!!~@: My poor toe!

@~CoNtAgIoUs Me!!~@: My poor toe!

Thursday, September 02, 2004

Mudal Kirukal.

Mudal Kirukal.......

Kirukuven Kirukuven...........Kattam pottu kirukuven naanu.........
e Ajak ajak ajak e ajak ajak ajak

ippadiye kirukuna...........konjanaal la total kiruku aayidalam........