.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, August 14, 2008

வடிவேலு - நகைச்சுவை

சில சமயங்களில் பொழுதே போகாதபோது நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பது வடிவேலுவிடைய நகைச்சுவையைத்தான்.
ஆரம்பகால படங்களில் வடிவேலு என்னைக் கவரவில்லை. Friends, வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களிலிருந்து வடிவேலு ரசிகனாகிவிட்டேன் என்று தான் சொல்ல் வேண்டும்.

என்னை கவர்ந்த படங்கள் இங்கே
Friends - நேசமணி
வெற்றிகொடிகட்டு - துபாய் return
கிரி
தலைநகரம் - நாய் சேகர்

Labels: , , ,

Wednesday, August 13, 2008

உருளைக்கிழங்கும் உலக வெப்பமயமாதலும்

புவி வெப்பமயமாதலுக்கு ஆடு, மாடுகள் வெளியேற்றும் மீதேன்(methane) வாயுக்கள் கரியமில (CO2) வாயுவைவிட அதிகம் துணை போகின்றனவாம். ஆனால் கங்காரு-க்களுடைய செரிமான அமைப்பு ஆடு, மாடுகளைக்காட்டிலும் முற்றிலும் மாறாக இருக்கிறதாம். அவை மீதேன் வாயுக்களை சிறிதும் வெளியேற்றுவதில்லை. அதனால் கங்காரு-கறிக்கு மாறச்சொல்கிறார் ஆஸ்திரேலிய பேராசிரியரொருவர். முழு செய்தி இங்கே.

எனக்கு சில வருடங்களுக்கு முன் பெர்லினில் ஆஸ்திரேலிய ரெஸ்டாரன்டொன்றில் கங்காரு-கறி சாப்பிட்ட ஞாபகம் வந்தது. பார்க்க காட்டு முயல் கறி போல கரு கருவென்று இருந்தாலும் சுவை ஒன்றும் சொல்லிக்கொ(ல்லு)ள்ளும் அளவில் இல்லைஇ

உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்கள் கூட உலக வெப்பமயமாதலுக்கு காரணம் என்று யாரேனும் சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை

Labels: , ,